தமிழகத்தில் திமுக குழப்பம் செய்ய முயற்சி: ஹெச். ராஜா

தமிழகத்தில் திமுக குழப்பம் செய்ய முயற்சி: ஹெச். ராஜா
X

ஹெச். ராஜா

தமிழகத்தில் திமுக குழப்பம் செய்ய முயற்சி செய்வதாக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரையில் கூறினார்

மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்தித்து பேசும்போது,

திமுக 100 நாட்கள் ஆட்சி என்பதை மிகப்பெரிய தோல்வி என்று ஒரேவரியில் சொல்லி விடலாம். 1967ஆம் ஆண்டு முதலே திமுகவின் வரலாறு இது தான். ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள் செய்துள்ளார்களா? மேலும், தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என்றும் அதற்கு ஆய்வுக்குழு அமைக்கப்படும் என சொல்கிறார்கள்.

வெள்ளை அறிக்கையில் அதிமுக கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார் நிதி அமைச்சர். ஆனால் ,திமுக அரசு கடந்த 90 நாட்களில் நாற்பதாயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர். மேலும் ,92,000 கோடி வாங்க திட்டமிட்டுள்ளனர். பொருளாதாரம் தெரிந்தவரின் பட்ஜெட்டா இது?

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மற்றும் நிதிநிலையை சீர் செய்வதற்கான அம்சம் இந்த பட்ஜெட்டில் இல்லை.மின்வாரியம், போக்குவரத்துத் துறை உள்ளிட்டவைகளை 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது போன்றவைகளுக்கு தீர்வு காணாமல், எப்படியாவது ஜாதி சண்டையை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக ஒரு ஆணையை செயல்படுத்தி உள்ளனர்.

தற்போது, அறிவித்துள்ள சட்டம் 5 நிமிடத்தில் நீதி மன்றத்தில் அடிபட்டு போகும். தமிழகத்தில் ஏற்கனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவே உள்ளார்கள். மக்களை திசை திருப்பவே இதனை கொண்டுவருவதாக பொய் பரப்புகின்றனர். கோவில் நிறுவப்படும் முறையிலேயே அதன்படியே பூஜைகள் என்பதை பிரிவு 26 சட்டமே சொல்கிறது. பிராமணர், பிராமணர் அல்லாதோர் இடையே மோதலை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். என கூறினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!