விரகனூர் மதகு அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

விரகனூர் மதகு அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
X

விரகனூர் மதகு அணை

விரகனூர் மதகு அணையில் உள்ள முட்புதர்கள், செடிகளை அகற்றி தூர்வார விவசாயிகள் வேண்டுகோள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விரகனூர் பகுதியில் அமைந்துள்ளது விரகனூர் மதகு அணை . 1975ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணையின் மூலம் சுமார் 3 லட்சம் ஏக்கர் உள்ள பாசன விவசாயிகள் பயன்பெறுகின்றனர். தற்போது பராமரிப்பு இன்றி தூர் வாராமல், ஆகாயத்தாமரை மற்றும் களைச்செடிகள். கருவேல மரம் மண்டி புதர் போல் காணப்படுகிறது.

இதனால், மானாமதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ,திருச்சுழி போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து செல்ல வேண்டிய தண்ணீர் செல்லவில்லை. இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தமிழக முதல்வர் தலையிட்டு விரகனூர் மதகு அணையை தூர்வாரி விவசாயிகள் பயன்படும் வகையில் சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story