மதுரை கொரோனா தடுப்பூசி மையத்தில் கர்ப்பிணிகள், டாக்டர்கள் உறுதிமொழி ஏற்பு

மதுரை கொரோனா தடுப்பூசி மையத்தில் கர்ப்பிணிகள், டாக்டர்கள் உறுதிமொழி ஏற்பு
X

கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் மருத்துவர்கள்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் இன்று கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவலானது அதிவேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் அனைத்து தடுப்பூசி மையங்களிலும், கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையமான இளங்கோ மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில் உறுதிமொழி எடுத்துக்காெள்ளப்பட்டது.

இதில், சமூக நல மருத்துவ உயர் நிலைத்துறை மருத்துவ துறை தலைவர் டாக்டர் பிரியா, உதவி பேராசிரியர் டாக்டர் திருக்குமரன், டாக்டர் வசிம்ஷா, உதவி நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் விஜி, செவிலியர் அமுதவள்ளி, நுண்ணறிவு பிரிவு ஐயப்பன் மற்றும் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவல் தடுப்பு உறுதி மொழியான முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், தனி மனித இடை வெளி வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பது போன்ற உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இதேபோன்று, மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவிலும் கர்ப்பிணி தாய்மார்கள், மருத்துவர்களும் கொரோனா தடுப்பு உறுதி மொழி எடுத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture