70 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையை சந்தித்த மதுரை
பொதுவாக மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு பருவமழை கிடையாது. செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் பதிவாகும் வெப்பசலன மழையே இங்கு அதிகம். பகலில் வெயிலும் மாலை இரவு நேரத்தில் மழையும் காணப்படும். இதுதான் மதுரையின் சிறப்பு. அக்டோபர் மாதம் மதுரைக்கு மழைகாலம் என்றாலும் தொடர்ந்து 100 மிமீக்கு மேல் மழை பெய்வது மிகவும் அரிதாகவே காணப்படும். இந்தாண்டு அடிக்கடி மதுரையில் கனமழை பெய்து வருகிறது.
வரலாற்றில் மதுரை எப்படி?
மதுரை மழை வரலாற்றை திருப்பி பார்க்கும் போது இந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை நகரை பொறுத்தவரை 17-10-1955 ஆம் ஆண்டு 115 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதன் பின்னர் தற்போது 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அக்டோபர் மாதத்தில் 100 மிமீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக 13-10-2024 ல் மதுரையில் ஒரே நாளில் 110 மிமீ வரை மழை பதிவாகியிருந்தது .1955 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகப்பட்ச மழையாகும். இன்று மதுரை ISRO வில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று பதினைந்து நிமிடத்தில் 4.5 சென்டி மீட்டர்... அதாவது 45 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதுவும் 3 மணி முதல் 3.15 மணிக்குள் இவ்வளவு மழை பதிவாகி உள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு அதிக மழையினை மதுரை இதுவரை சந்தித்தது இல்லை.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை வரும் நாட்களிலும் அதிகமழை பெய்யும். ஒட்டுமொத்த வடகிழக்கு பருவமழையையும் இந்த அக்டோபர் மாதத்திலே மதுரை பெற்று விடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu