மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி விழா:

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி விழா:
X
மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் ஆக.13-ல் வளர்பிறை பஞ்சமி, வராஹியம்மன் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

மதுரையில் வருகிற 13 ம் தேதி ஆடி வெள்ளியன்று, வளர்பிறை பஞ்சமி திதி நாளில் வராஹியம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்களை பக்தர்கள் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. சில ஆலயங்களில், தேய்பிற பஞ்சமியன்றும் வராஹியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதும் வழக்கம்.

இந்நிலையில், மதுரை அருகே உள்ள திருவேடகம் ஏடகநாத சுவாமி ஆலயத்திலும், மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகே அமைந்துள்ள சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும் மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமியன்று, வராஹியம்மன் சன்னதி முன்பாக ஹோமம் மற்றும் அபிஷேக, அர்ச்சணைகள் தொடர்ந்து நடைபெறும்.

காலை 10.30.மணிக்கு பக்தர்களால் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!