மதுரையில் திடீரென பெய்த சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரையில் திடீரென பெய்த சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மதுரையில் பெய்த மழை.

மதுரையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இன்றும் திடீர் மழை பெய்து மதுரை மாநகரை குளிர்வித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் நிலவியது. பிற்பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக, சூடானக் காற்று வீசியது. இரவு நேரங்களில், கடும் வெப்பம் நிலவி வருகிறது.

வெப்பத்தை தணிக்கும் வகையில், மதுரை நகரில், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பநகர், வண்டியூர் பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்தது.

இதனால், மதுரை நகரில் மாலை நேரத்தில் வெப்பம் லேசாக தணிந்தது. மதுரை நகரில் வெப்பம் பெய்த சாரல் மழையால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!