முகக்கவசம் அணியாதர்களிடம் ரூ.22,700 அபராதம்: மதுரை மாநகராட்சி வசூல்!

முகக்கவசம் அணியாதர்களிடம் ரூ.22,700 அபராதம்: மதுரை மாநகராட்சி வசூல்!
X

கோப்பு படம்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக ரூ.22,700 அபராதத்தை மதுரை மாநகராட்சி வசூலித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கக்ப்பட்டு வருகிது.

அந்தவகையில்,மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது தற்பொழுது மதுரை மாவட்ட நிர்வாகம் சீரிய நடவடிக்கையால் தற்போது குறைந்து வருகிறது.

இந்தநிலையில் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உட்பட்ட நான்கு மண்டலங்களில் முககவசம் அணியாமல் பொதுஇடங்களில் சென்றதாக பொதுமக்களிடம் சுமார் 22 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!