மதுரை மாவட்டத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம்: எஸ்பி பங்கேற்பு

மதுரை மாவட்டத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம்: எஸ்பி பங்கேற்பு
X

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர் குறை தீர்ப்பு முகாம் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர் குறை தீர்ப்பு முகாம் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் காவல்துறையில், முதலமைச்சர் திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் அலுவலகத்தில், காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, காவல் துறையில், முதலமைச்சர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில், மாவட்ட ஆயுதப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், தலைமையில் நடைபெற்றது.

இந்த குறை தீர்ப்பு முகாமில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் வரை மொத்தம் 150 பேர் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி, காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!