காலணி கடைகளுக்கு அனுமதி அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

காலணி  கடைகளுக்கு அனுமதி அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
X

காலணி கடைகளுக்கு அனுமதி அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

பல்வேறு கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் காலணி விற்பனை கடைகளுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கொரோனா ஊரடங்கில் இன்றுமுதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுபானகடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஜவுளிகடைகள், காலணி விற்பனை கடைகள் போன்றவற்றிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் காலணி விற்பனையை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என லட்சக்கணக்காணோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளதாகவும், பொதுமக்கள் பயன்படுத்தகூடிய அடிப்படை பாதுகாப்பிற்கு தேவையான காலணிகள் இருப்பதால் பொதுமக்களின் தேவை அறிந்தும் உடனடியாக உரிய வழிகாட்டுதல்களுடன் காலணி விற்பனை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மதுரை செப்பல் பஜார் சங்கத்தின் சார்பில் காலணி கடை வியாபாரிகள் ஏராளமானோர் மதுரை மாவட்ட ஆட்சியர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!