மதுரையில் புதிய மருத்துவக்காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கல்

மதுரையில் புதிய மருத்துவக்காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கல்
X

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 32 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் வழங்கினார்.

மதுரையில், 32 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்:

மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூபாய் 5 இலட்சம் வரை காப்பீட்டுத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 74 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏழை எளிய மக்கள் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 07.05.2021 முதல் 107 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 984 பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 நபர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், அவர்களுக்கு பரிசுகளும் இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 தொடர்பு அலுவலர்கள் மற்றும் 2 அரசு மருத்துவமனை திட்ட வார்டு மேலாளர்களுக்கு சான்றிதழ்களையும், ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கடாசலம், மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் முரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, தீபக்ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story