மதுரை இதயம் காப்பகத்தில், முதியவர்களை துன்புறுத்தியதாக வழக்கறிஞர் புகார்:
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் காப்பகத்தின் மீது வழக்குரைஞர் புகார் தெரிவித்துள்ளார்
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவக்குமார், மாதர்ஷா ஆகியோர் உரிய அங்கீகாரம் பெறாமல் அரசு மற்றும் காவல்துறையினரை நம்பவைத்து முதியவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்து காப்பகம் நடத்தி வந்ததாக கடந்த வாரம் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.8
இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லும்போது, தங்களை ,இதயம் அறக்கட்டளை காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என வர மறுத்தனர். இதுகுறித்து விசாரித்த போது, இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் தங்களை துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாகவும், இதனால், தாங்கள் மீண்டும் இதயம் அறக்கட்டளை காப்பகத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், தங்களுடைய பணம், பொருட்கள் மற்றும் உடமைகளை மீட்டுத்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, வழக்குரைஞரும் சமூக செயல்பாட்டாளருமான முத்துக்குமார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இன்று புகார் மனுவை அளித்தார்.
அந்த புகார் மனுவில், முதியவர்களை துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக மேலும், ஒரு வழக்கு இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள் மீது பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu