மதுரையில் கிராமிய கலைஞர்களுக்கு நிவாரண உதவி

மதுரையில் கிராமிய கலைஞர்களுக்கு நிவாரண உதவி
X
மதுரையில் கிராமிய கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய மக்கள் நீதி மையத்தினர்.

மதுரையில் வடக்கு மாவட்ட மக்கள் நீதி மையத்தின் சார்பில், சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன், கிராமிய கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். சமூக சேவகரான இவரும், அவரது நண்பர்களான குணா அலி, நாகேந்திரன் ஆகியோருடன், மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி அழகர் ஆலோசனையின் பேரில், கிராமிய கலைஞர்களுக்கு கொரோனாவையொட்டி, நிவாரணத் தொகையை வழங்கினர்.

மதுரையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில், புனிதராஜா, பூமிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து சமூக ஆர்வலரும், மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த முத்துராமன் கூறியது: கொரோனாவையொட்டி, நலிந்த கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள், சாலைகளில் வசிப்போர், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த15 மாதங்களாக தொடர்ந்து உதவி செய்கிறோம் என்றார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare