வரிச்சூரில் பூட்டி கிடக்கும் அம்மா மினி கிளினிக் திறக்க கிராம மக்கள் கோரிக்கை

வரிச்சூரில் பூட்டி கிடக்கும் அம்மா மினி கிளினிக் திறக்க கிராம மக்கள் கோரிக்கை
X
மதுரை அருகே வரிச்சூரில், பூட்டியுள்ள அம்மா கிளினிக்கை திறக்க கோரிக்கை:

மதுரை அருகே வரிச்சூரில் பூட்டிக்கிடக்கும் அம்மா மினி கிளினிக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்

மதுரை மாவட்டம், மதுரை- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வரிச்சியூர் கிராமம். வரிச்சியூர் கிராமத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட சிற்றூர்கள் உள்ளன.

வரிச்சியூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மருத்துவ தேவைக்கு செல்ல வேண்டுமென்றால், அருகிலுள்ள பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும்.

எனவே, வரிச்சியூர் மற்றும் சுற்றுப்புறகிராம மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1970 -ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணநிதி, கிராம பொது மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, 1971-ஆம் ஆண்டு மருத்துவமனையை திறந்துவைத்தார். அதன்பிறகு, தொடர்ந்து செயல்பட்டு வந்த இம்மருத்துவமனை கடந்த சில வருடங்களாக இம்மருத்துவமனை செயல்படாமல் இருந்து வந்தது.

இதனால், கிராம மக்கள் மருத்துவ தேவைக்கு மதுரைக்கு செல்லவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு சிரமபட்டு வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் 2020-இல் வரிச்சியூர் ஊராட்சி மன்றத் தலைவர் (அதிமுக) முத்துச்செல்வி சரவணன் எடுத்த முயற்சியின் பயனாக அம்மா மினி கிளினிக் ஆக மாற்றப்பட்டு கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டது.

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன. கிராம மக்களின் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு கிராம பொது மருத்துவமனையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வரிச்சியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துச்செல்வி சரவணன் மற்றும் சுற்றுப்புற 22 கிராம பொது மக்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!