கொடநாடு கொலை வழக்கில் மறு விசாரணை: அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கொடநாடு கொலை வழக்கில் மறு விசாரணை:   அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

கொடநாடு வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினை கண்டித்து அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கொடநாடு கொலை வழக்கு மறு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கியக் குற்றவாளி சயானிடம், காவல் துறையினர் நேற்று மறு விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து, கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர், கூட்டணிக் கட்சியினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், மதுரை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு அணியினர், மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது, பொய்வழக்கு போட சதி நடப்பதாகவும், கொடநாடு வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், அதிமுக வழக்கறிஞர்கள் கையில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!