விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி காேரி மதுரையில் 20 கோயில்கள் முன் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி காேரி மதுரையில் 20 கோயில்கள் முன் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கொரோனா பரவலை காட்டி, இந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு தி.மு.க., அரசு தடை விதித்தது. இதை கண்டித்து, மதுரையில் 20 கோயில்கள் முன் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மீனாட்சி அம்மன் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோயில், கோச்சடை முத்தையா சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார், பொறுப்பாளர் காக்குவீரன், மாவட்ட துணைத் தலைவர் மாணிக்க மூர்த்தி, மேற்குபகுதி தலைவர் சிவமூர்த்தி, சுதேசி இயக்க நிர்வாகி ஆதிசேஷன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிரதமருக்கு கடிதம்: பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயசிங், பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: செப்., 10 விநாயகர் சதுர்த்தி விழா ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து கொண்டாடவுள்ளனர். கொரோனா ஊரடங்கை காட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், டாஸ்மாக், வாரச்சந்தை உள்ளிட்டவை செயல்படும் போது அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விழாவிற்கு தடை விதிக்கிறது. இந்துக்களின் மத உணர்வுடன் அரசு விளையாடுகிறது. எனவே, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

எழுமலை : எழுமலை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் வேண்டுதல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றியத் தலைவர் லட்சுமணன், பேரூராட்சித் தலைவர் சின்னசாமி, பா.ஜ., ஒன்றிய த்தலைவர் மருதக்காளை ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்