மதுரையில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டம்

மதுரையில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டம்
X

மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என்ற தீர்மானிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மண்டல் தலைவர்கள் கூட்டம், அமைப்பின் தலைவர்கள் கூட்டம், மாநிலம் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே கே சீனிவாசன், தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல், அக்டோபர் ஏழாம் தேதி வரை சேவை வாரம் கொண்டாட வேண்டும்; மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் தங்கள் நிர்வாகிகள் கூட்டம் நடத்த வேண்டும்; மதுரை மாநகருக்கு உட்பட்ட 18 மண்டலங்களுக்கும் அனைத்து தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்வது, செப்டம்பர் 25 தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் கொண்டாட கொண்டாட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கணேஷன், மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பாலசுந்தர், பொருளாளர் பாலமுருகன், பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்