மதுரையில் உள்ள சிறிய கோயில்களில் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆடிப்பூர விழா

மதுரையில் உள்ள சிறிய கோயில்களில் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆடிப்பூர விழா
X

பைல் படம்.

மதுரையில் 11-ம் தேதி ஆடிப்பூர விழா கொரோனாவையொட்டி எளிமையாக நடத்த தனியார் ஆலயங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், தமிழகத்தில் உள்ள ஆலயங்களில், ஆடிப்பூரத்தன்று, பெண் தெய்வங்களுக்கு, மஞ்சள் பொடி, பால், அபிஷேகப் பொடிகள், பன்னீர், சந்தனம் போன்ற வாசணை திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கொரோனாவை காரணம் காட்டி, பெரிய கோயில்களில் பூஜையானது பணியாளர்களை வைத்து நடைபெறுகிறது. அத்துடன் பக்தர்கள் அனுமதி கிடையாது.

இந்த நிலையில், மதுரை நகரில் உள்ள சிறிய கோயில்களில், ஆக. 11 -ம் தேதி, புதன்கிழமை காலை, குறைந்த பக்தர்களுடன், சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசத்துடன், துர்க்கை, வராஹியம்மன், மீனாட்சி, அம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு அன்றையதினம், வளையல் காப்பு நடைபெறும்.

மதுரை நகரில், மேலமடை வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர், செல்வ விநாயகர், ஜூப்பிலி டவுன் ஞானசித்தி விநாயகர், சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம் மற்றும், மதுரை மேலமடை, சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், ஆக.11 -ம் தேதி, புதன்கிழமை காலை 10.30மணிக்கு ஆடிப்பூரவிழாவையொட்டி, வளையல்காப்பு பூஜை நடைபெறுகிறது.

பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!