மதுரை அரசு ஐடிஐ-இல் அக்.4- ஆம் தேதி தொழில் பழகுநருக்கான நேர்காணல்

மதுரை அரசு ஐடிஐ-இல்  அக்.4- ஆம் தேதி தொழில் பழகுநருக்கான நேர்காணல்
X
தொழில் பழகுநருக்கு தேர்ந்து எடுக்கப்படுவோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்

தொழிற் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை அரசு ஐடிஐ -இல் தொழில் பயிற்சி பழகுநர் சேர்க்கை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மதுரை கோ. புதூரில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், தொழிற் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில் பழகுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தமிழக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், 2017, 18, 19-ஆம் ஆண்டுகளில், தொழிற்பயிற்சி முடித்தவர்கள், தொழில் பழகுவதற்காக , அக். 4-ஆம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். நேர்காணலுக்கு வருபவர்கள், தேர்ச்சி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், ஆகியவற்றுடன் அக். 4.-ஆம் தேதி, மதுரை கோ.புதூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், காலை 10 மணிக்கு நேரில் வரலாம். தொழில் பழகுநருக்கு தேர்ந்து எடுக்கப்படுவோருக்கு, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன், பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
செலவுகளை குறைத்து இலாபத்தை அதிகரிக்க செய்யும் AI Business பற்றி  நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!