தமிழக முதல்வர் மதுரை வருகை -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

தமிழக முதல்வர் மதுரை வருகை -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
X

மதுரை முதல்வர் வருகை -பாதுகாப்பு பணியில் காவல்துறை

இந்த மினி டூரின் போது அண்ணன் அழகிரி நேரில் மீட் பண்ண திட்டமிட்டிருக்கிறதா ஒரு சேதி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இன்று மாலை தனி விமானம் மூலம் மதுரைக்கு வரும் முதல்வர் காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இதனை தொடர்ந்து திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தயாராகி வரும் சிறப்பு வார்டுகளையும் ஆய்வு மேற்கொள்கிறார். இதனையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஆலோசனை கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கு உள்ளிட்ட பகுதிகளில் வெடி குண்டு நிபுணர்கள் வெடி குண்டு சோதனை செய்யும் கருவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுல ஒரு கொசுறு செய்தி நம்ம இன்ஸ்டாநியுஸ் வாசகர்களுக்காக..

ஆமாண்ணே சி.எம் .கிளம்பி இருக்கற இந்த மினி டூரின் போது மதுரை போய் அண்ணன் அழகிரி நேரில் மீட் பண்ண திட்டமிட்டிருக்கிறதா ஒரு சேதி வருதே நெசமா? -அப்படீன்னு கேட்கறாய்ங்க

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!