மதுரையில் கெட்ட பெயர் எடுக்காத எளிமையான எம்.பி. வெங்கடேசன்.

மதுரையில் கெட்ட பெயர் எடுக்காத எளிமையான எம்.பி. வெங்கடேசன்.
X

மதுரை மக்களவை உறுப்பினர் எஸ். வெங்கடேசன்.

தனது தொகுதியை சார்ந்தவர்கள் தன்னை எப்போது வேண்டுமானால் சந்திக்கலாம் என்பதை அறிவிப்போடு மட்டுமின்றி கடந்த 4 ஆண்டுகளாக அதை செயல்படுத்தியும் வருகிறார்

தமிழக அரசியலில் திருப்புமுனை நகரமாகவும், அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கும் நகராகவும் மதுரை கருதப்படுகிறது.

மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை மக்களவை தொகுதி. மதுரை மக்களவை தொகுதியை அதிக முறை வென்றது காங்கிரஸ் கட்சிதான். இத்தொகுதியை காங்கிரஸ் கட்சி எட்டு முறை வென்றுள்ளது. இடதுசாரி இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களான கே.டி. தங்கமணி, ராமமூர்த்தி, சங்கரைய்யா என பல ஜாம்பவான்கள் எம்.பி.யான தொகுதி இது.

2009 மக்களவை தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன், அதிமுக வேட்பாளரான, வி. வி. ஆர். இராஜ் சத்யனை, 1,39,395 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

சு.வெங்கடேசன் மதுரைச் சேர்ந்த சிபிஐ (எம்) எம்பி ஆவார். இவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் சிபிஐ (எம்) கட்சியின் நீண்டகால உறுப்பினர். தனது பள்ளி நாட்களிலேயே இவர் தனதுஅரசியல் பயணத்தை தொடங்கினார். 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது முதல் நாவலான காவல்கோட்டம் புத்தகத்திற்காக 2011 இல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். அவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

மதுரை மக்களவை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் குறித்த ரிப்போர்ட் பாசிட்டிவாக உள்ளது. விண்ணப்பங்களில் தமிழ் மறுப்பு உள்ளிட்ட யாரும் கண்டுபிடிக்காத முடியாத நுண் விவகாரங்களை கூட பெரிதுபடுத்தி மத்திய அரசை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து வருகிறார் சு.வெங்கடேசன்.

இதுமட்டுமல்லாமல் தனது தொகுதி சார்ந்த பணிகளையும் மிகுந்த ஆர்வமுடன் செய்து வருகிறார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தனது தொகுதியை சார்ந்தவர்கள் தன்னை எப்போது வேண்டுமானால் சந்திக்கலாம் என்பதை அறிவிப்போடு மட்டுமின்றி கடந்த 4 ஆண்டுகளாக அதை செயல்படுத்தியும் வருகிறார். இதனால் மதுரை மக்கள் மத்தியில் எளிமையானவர் என்ற பெயரை எடுத்திருக்கிறார் சு.வெங்கடேசன்.

மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன், மக்கள் பிரச்சனையை தீர்க்க ஆர்வம் காட்டியுள்ளார். மதுரையில், விமான நிலைய விரிவாக்கம் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் வரை நடைபெற மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார்.

இவை தவிர, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நீண்ட நாளுக்கு பயன்பாட்டுக்கு வராமல் இருந்த பெட் சி.டி ஸ்கேன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

மதுரை விமான நிலைய விரிவாக்கம் சார்ந்த பணிகள் மற்றும் மதுரையிலிருந்து, மலேசியாவுக்கு புதிய விமானப் போக்குவரத்து தொடங்குவது, பற்றி மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளார்.

மதுரை எம்.பி. வெங்கடேசன், மாணவர்கள் அரசு தேர்வில் வெற்றி பெற நோக்குடன், மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் அருகே படிக்க வசதி செய்து தந்துள்ளார்.

தேர்தலில் அவர் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றியதுடன், அவர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்ததுடன், மக்கள் பிரச்னைக்காக, மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியதுடன், நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பதில், அவர் தவறியதில்லை.

மேலும், மதுரை மெட்ரோ திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், மத்திய அரசின் திட்டங்களை, மக்களவை தொகுதியில் செயல்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுத்திய உள்ளார். மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாள்களை தவிர மற்ற நாள்களில் , பொதுமக்கள் இவரை எளிதாக சந்திக்கலாம்.

இதுவரை எந்த வித ஊழல் புகாரில் சிக்காதவர் என, பெயர் இவருக்கு உண்டு. இதனால், மார்க்சும் கம்யூனிஸ்ட் கட்சி, இவருக்கு மீண்டும் சீட் ஒதுக்கலாம் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

ஆனால், அதே சமயத்தில் கூட்டணிக் கட்சியான திமுகவில், மதுரை மக்களவை தொகுதியை கைப்பற்ற பல வித முயற்சிகள் நடக்கிறதாம். மதுரை எம்.பி. வெங்கடேசனை பொறுத்த மட்டில், மக்கள் பணியை தன் முழு நேரப் பணி என்கின்றனர் மதுரை மக்களவை பொது மக்கள்.

மதுரை மக்களவை உறுப்பினர் எஸ். வெங்கடேசன் கூறுகையில், மதுரை மக்களவை தொகுதியில், எம்.பி. என்ற முறையில், மக்கள் பணிகளை நான் ஆற்றியுள்ளேன். மதுரை நகரில் சாலை சீரமைப்பு பணிகளை,மேற்கொள்ள அமைச்சர், மேயர், அரசு அதிகாரிகளிடம் கோரியுள்ளேன். மதுரை மாநகரில் வைகை கூட்டு குடிநீர் திட்டம் பணி துரிதமாக நடந்து வருகிறது என்றார்.

மதுரையில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, சர்வதேச விமான நிலையமாக மதுரையை மாற்றுவது தான் நிறைவேற்றாமல் உள்ளது.

மதுரை மக்களவை தொகுதியை பொறுத்தமட்டில், கெட்ட பெயரை சம்பாதிக்கத் எம்.பி. வெங்கடேசன்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!