மதுரை அரசு ஆஸ்பத்திரியிலேயே மருந்து கொள்ளை :என்னத்தங்க சொல்றது..?

மதுரை அரசு ஆஸ்பத்திரியிலேயே மருந்து கொள்ளை :என்னத்தங்க சொல்றது..?
X

மதுரை அரசு ஆஸ்பத்திரி 

மதுரை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்துபெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன

மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவர் மருந்து பெட்டிகள் காணவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை தொடர்ந்து மருத்துவமனையின் கீழ் செயல்படகூடிய மருந்துகள் சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் தனித் தனியாக விசாரணை நடத்திவருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதனடிப்படையிலும் , காலிப்பெட்டிகளில் உள்ள கைரேகை குறித்து ஆய்வுசெய்தும் மருந்துகளை கொள்ளையடித்து சென்ற நபர்கள் குறித்து மதிச்சியம் குற்றபிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பு மருந்தாக வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. ரெம்டெசிவர் மருந்து பெறும்போது மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளியின் உடல்நலம், ஆதார்அட்டை ஆகியவற்றை சமர்பித்தால் மட்டுமே ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படும் என்ற நிலையில், தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவர் மருந்துகள் எப்படி வெளி சந்தையில் விற்பனைக்கு செல்கிறது என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings