மதுரையில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் பிள்ளைமார் சங்கம் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை அமைக்க கோரி சிவாஜி ரசிகர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
மதுரை சினிமா துறையில் தனக்கான பாணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்கள் நடித்து வந்தார். அவரது, 93 -வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் நடிகர் திலகம் சிவாஜி சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்ற செயலாளர் முருக விலாஸ் நாகராஜன் தலைமையில், காந்தி சிலை அரவணைப்பு குழுத் தலைவர் சாமிக்காளை ஆகியோர் தலைமையில், சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் மக்கள் செய்தி தொடர்பாளர் ஆசிரியத்தேவன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதேபோல், சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில், சிவாஜி சிலை அருகே மரக்கன்றுகள் நட்டனர்.
ஜனதாதளம் கட்சி சார்பில், அதன் மாவட்டத் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை மற்றும் பல்வேறு சிவாஜி ரசிகர்கள், பிரபு ரசிகர்கள், விக்ரம் பிரபு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவாஜி ரசிகன் என்ற முறையில் ஆசிரியத்தேவன் செய்தியாளர் கூறும்போது: சென்னையில் உள்ள மெரினா கடற்கரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது சிலையை நிறுவப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்பாேதைய திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நடிகர் சிவாஜி கணேசன் சிலை அமைக்க வழிவகுக்க வேண்டும் என்றார் அவர்.
இதேபோல், மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய உருவச் சிலைக்கு, தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை சங்கத்தின் நிறுவனர் ஆறுமுகம் பிள்ளை மாலை அணிவித்தார். திருக்குமரன் மற்றும் அன்னலட்சுமி கணேசன் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu