மதுரை: தீக்குளித்த மகனும், காப்பாற்ற முயன்ற தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை: தீக்குளித்த மகனும், காப்பாற்ற முயன்ற தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

சித்தரிக்கப்பட்ட படம்

மதுரையில் தீக்குளித்த மகனை, காப்பாற்ற முயன்ற தாய் பலி:

மதுரையில் தீக்குளித்த மகனும், காப்பாற்ற முயன்ற தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மதுரை, மேல அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் அருண் சக்கரவர்த்தி(28). இவருக்கு திருமணமாகி 6 மாதத்தில் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாராம் . மேலும் வேலையின்றியும் இருந்துள்ளார். இதில் விரக்தியடைந்த அருண் சக்ரவர்த்தி, இரு தினங்களுக்கு முன் தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அவரது தாய் செல்வ ஈஸ்வரி காப்பற்ற முயன்றார். அதில் இருவரும் பலத்த காயமுற்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்தனர். இந் நிலையில், நேற்றிரவு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!