பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு 20 சதவீதத்தில் மாற்றம் கூடாது:சமூகநீதி கூட்டமைப்பு

பிற்பட்டோருக்கான  இடஒதுக்கீடு  20 சதவீதத்தில் மாற்றம் கூடாது:சமூகநீதி கூட்டமைப்பு
X
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் 10.5% இட உள் ஒதுக்கீடு அநீதியானது என்பதை விளக்க விரைவில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவோம்

தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றம் கூடாது என்று சமூக நீதி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் மிகவும் பிற்பட்டோர்,ஒடுக்கப்பட்ட சமூகங்களின் : சார்பில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும், நிர்வாகிகள் கூறுகையில் 10.5% வன்னியர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அறிஞர் குழு மூலம் ஆய்வு செய்து எல்லா சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு இடத்திலும் கிடைத்திடும் வகையில் வகுப்புவாரித் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை வகுத்துச் செயல்படும் வரை முறை எம்.பி.சி. 20% இட ஒதுக்கீட்டைச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய கூடாது என அரசை வலியுறுத்துவதுவோம் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டதில், இட ஒதிக்கீடுக்கு எதிரான பொது வெளியில் நடைபெறும் பொய் பிரசாரங்களை முறியடித்து, அனைத்து மக்களுக்குமான சமூக நீதியை காக்க பாடுபடுவோம். 10.5% இட ஒதுக்கீடு அநீதியானது என்பதை விளக்க விரைவில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெண்கள் தா்னா