மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீர வசந்த ராயர் மண்டபம் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த வீர வசந்த ராயர் மண்டபம் புனரமைப்பு பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆகும் என்றார் பண்பாட்டுத் துறை அரசு செயலாளர் டாக்டர் சந்திரமோகன்.
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அரசுசெயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு செயலாளர் டாக்டர். சந்திரமோகன் கூறுகையில், மதுரை உள்ள திருமலை நாயக்கர் மஹால் ரூ.. 8 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட இருக்கிறோம், 1.7 கோடி ரூபாய் மதிப்பில் திருமலைநாயக்கர் மகாலில், ஒளி ஒலி காட்சிக்கு ஏற்ற வகையில் புதிய விளக்குகள் அமைக்கப்பட இருக்கிறோம். அதற்கான ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் காலம் என்பதால் தாமதமானது விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொல்லியல் எச்சங்கள் பொதுமக்கள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு,பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் நம்முடைய தொல்லியல் சின்னங்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதர்களுக்கும் வர வேண்டும். அதற்கு தேவையான முயற்சிகளை நாங்கள் எடுப்போம் ,கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி கொரோனாவால் தாமதமானது.
தமிழகத்தில் பழமையான இடங்களை பராமரிப்பது குறித்து தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது விரைவில் அதற்கான அறிவிப்பு வர வாய்ப்புகள்,மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்த ராய மண்டபம் புனரமைக்க தற்போதுதான் கல்கள் வந்துள்ளது, ஸ்பதி குழுவிற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த வீர வசந்த ராயர் மண்டபம் புனரமைப்பு பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆகும். அதற்குப் பிறகுதான் கும்பாபிஷேகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu