மதுரை திருமலை நாயக்கர் மஹால் ரூ. 8 கோடியில் புணரமைக்கப்படும் -அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரை திருமலை நாயக்கர் மஹால் ரூ. 8 கோடியில் புணரமைக்கப்படும் -அமைச்சர் தங்கம் தென்னரசு
X
மதுரை திருமலை நாயக்கர் மகால் ரூ. 8 கோடியில் புணரமைக்கப்படும்.

திருமலை நாயக்கர் மஹால் ரூ.8 கோடி மதிப்பில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பழமை மாறாமல் ஒளி-ஒலி காட்சி இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக மக்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் வகையில் தமிழகத்தில் ஏராளமான புராதான சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் தென் தமிழகத்தில் முக்கியமான ஒன்றாக மன்னர் திருமலை நாயக்கர் மஹால் உள்ளது.

தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை தமிழ் சமுதாயம் மட்டுமன்றி உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை புதுப்பிக்கும் பணியில் தமிழக அரசு முன்வந்துள்ளது. மன்னர் திருமலை நாயக்கர் மகாலை ரூ.8 கோடி மதிப்பில் மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare