லஞ்சம் வாங்கியதாக வரித் தண்டலர் கைது:

லஞ்சம் வாங்கியதாக வரித் தண்டலர் கைது:
X
மதுரையில் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி வரித்தண்டலர் கைது:

மதுரை மாநகராட்சி தொழில்முறை வரி நிர்ணயிக்க லஞ்சம் வாங்கிய வரி தண்டலர்( பில் கலெக்டர்) கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி அழகப்பன் நகர், மண்டலம் -4 வார்டு எண் 96க்கு வரித் தண்டலராக ஜெயராமன் என்பவர் பணியாற்றி வந்தார்.

கடைகளுக்காகவும், கோடவுனுக்கும் தொழில்முறை வரியை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரூ. 4000- லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார் அளித்தார். இதையடுத்து, புகார் அளித்த நபர் லஞ்சப்பணத்தை ஜெயராமனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயராமனை கையும் களவுமாகப்பிடித்து அவரிடமிருந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றி கைது செய்து விசாரிக்கின்றனர்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!