முன்களப்பணியாளராக அறிவிக்கக் கோரி எல்.பி.ஜி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முன்களப்பணியாளராக அறிவிக்கக் கோரி எல்.பி.ஜி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
மதுரையில் எல்.பி.ஜி. காஸ் சிலிண்டர் டெலிவரி மேன்கள், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் மருத்துவர் செவிலியர் காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் உட்பட்டவர்கள் தமிழக அரசு முன் களப் பணியாளராக அறிவித்தது . அதேபோல், எங்களையும் மத்திய மாநில அரசு சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் வேலை பாதுகாப்புக்கும் உரிய ஊதியம் வழங்க கோரி

இபிஎப், ஈஎஸ்ஐ. மற்றும் உரிய பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் வழங்கக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர் . அதன்படி , மதுரை தினமணி தியேட்டர் அருகே மதுரை மாவட்ட எல்பிஜி சிலிண்டர் தெளிவுடன் தொழிற்சங்கம் சார்பில் அதன் மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஏராளமானோர் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் எங்களுக்கு முன்கள் பணியாளர் அறிவிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ,ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!