காப்பகத்தில் குழந்தைகளை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மதுரையில் மறியல்: 30 பேர் கைது

காப்பகத்தில் குழந்தைகளை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மதுரையில் மறியல்: 30 பேர் கைது
X
மதுரையில் காப்பகத்தில், குழந்தைகள் விற்பனை வழக்கில் துரித நடவடிக்கை கோரி சாலை மறியல்.

மதுரை இதயம் காப்பகத்தில் நடைபெற்ற குழந்தை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் , மதுரை புதூர் தாமரை தொட்டி அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோபிநாத், செயலாளர் செல்வா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளீட்டோர் மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!