/* */

மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவிகள் விடுதி: அமைச்சர் செஞ்சிமஸ்தான் ஆய்வு

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்

HIGHLIGHTS

மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவிகள் விடுதி: அமைச்சர் செஞ்சிமஸ்தான் ஆய்வு
X

மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவியர் விடுதியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும். கடந்த 2 மாதங்களில், வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்து உள்ளனர். 32 பேரில், 30 பேரின் உடல்கள் தமிழகத் துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில், 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு, வெளியே வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்.அதிமுக சரியாக ஆட்சி புரியததால், மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர் என்றார் அமைச்சர்.

பின்னர், கொரோனா தடுப்பூசி மையத்தினை ஆய்வு செய்த அமைச்சர், டாக்டர்கள் மற்றும் நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். பொதுமக்கள், மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார் . இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Updated On: 24 July 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?