மதுரை அருகே துணை சுகாதார நிலையம்: அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் கேட்டறிய வேண்டுமென்றும், அதன் சம்பந்தமான துறை அதிகாரிகளிடத்திலே அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியு்ள்ளார்.தமிழ்நாட்டில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்த நிலையில், முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால், தற்போது 8-ஆக குறைந்துள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் மிகவும் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்தொற்றானது தற்போது மிகவும் குறைந்துள்ளது.
பொதுமக்களுக்கு கட்டுப்பாடு, சுயக்கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர், எண்ணமாக உள்ளன. மூன்றாவது அலை பரவல் வர போகிறது எச்சரிக்கையாக இருங்கள் என்று தொலைக்காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகிறார்.
அதே நேரத்தில், மூன்றாவது அலை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தையும், மருத்துவத்துறையின் அதிகாரிகளையும் அழைத்து, அதற்கான நடவடிக்கை எடுத்து தயாராக வைத்திருக்கிறோம். மதுரை மாவட்டத்தைப் பொறுத்த அளவில் கொரோனா நோய்தொற்று வராமல் இருப்பதற்காக, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேகமாக அரசு மூலமாக ஒன்றிய அரசு வழங்க வேண்டுமென்று, முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி வரவர பொதுமக்களின் செயல்பாட்டிற்காக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றோம். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, காதக்கிணறு ஊராட்சியில் உள்ள துளசிதாச நகர் மற்றும் ஜெயபிரகாஷ் நகரில், அமைந்திருக்கின்ற துணை துணை சுகாதார நிலையத்தை, அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட மாயாண்டிபட்டி, சிதம்பரம்பட்டி, மேட்டுப்பட்டி, பட்டணம், அயிலாங்குடி, அ.புதூர், மலையாண்டிபுரம், இந்திரா காலனி, தேத்தான்குளம், யா.குவாரி, பொய்கை, முனியாண்டிபுரம், கொட்டகைமேடு, புதுப்பட்டி, அரும்பனூர், நவக்குளம், தூயநேரி, திருவிழான்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், கருப்பாயூரணி, ஒத்தவீடு, பாண்டியன்கோட்டை, பூலாங்குளம், பெரிய பூலாங்குளம், காத்தவனேந்தல், அய்யனார்நகர், ஆண்டார்கொட்டாரம், ஆண்டார்கொட்டாரம் காலனி, கருப்பபிள்ளையேந்தல், சந்திரலேகா நகர், களஞ்சியம், பசும்பொன் நகர், எம்.ஜி.ஆர் நகர், அஞ்சுகம் நகர், நரிக்குறவர் காலனி, விநாயகம் நகர், இ.புதூர், அம்பேத்கர் நகர், அன்னை சத்யா நகர், டு.மு.டீ.நகர், சமத்துவபுரம் மற்றும் முனியாண்டிபுரம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் த. சூரியகலா மற்றும் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu