கிராமங்களில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் மூர்த்தி

கிராமங்களில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் மூர்த்தி
X
பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்களில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வேண்டிதான் அதிக மனுக்கள் வரப்பெற்றுள்ளன.

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ப .மூர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை இன்று (29.07.2021) பெற்றுக் கொண்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கிராமங்கள் தோறும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை கிழக்கு தொகுதி தொகுதியில் தொடர்ந்து 4 நாட்கள் குறைகளை கேட்கக்கூடிய 150 கிராமங்களில் இந்தப் பணியை தற்பொழுது, மாங்குளத்தில் துவக்கி உள்ளோம். உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை ஒப்படைத்து உடனடியாக அதற்கு தீர்வு காணப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற பின், பொதுமக்களுக்கு பயன்படுகின்ற வகையில் பல்வேறு ஆக்க பூர்வமான திட்டங்களையெல்லாம் செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர், அறிவுரைப்படி, அமைச்சர் பெருமக்கள், அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் குறைகளையெல்லாம் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்கின்ற வகையில், அந்தந்த துறைகளின் அதிகாரிகளை அழைத்து விரைவில் தீர்வு காண்போம். பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும். மற்ற கோரிக்கை மனுக்களையெல்லாம் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறோம்.

பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்று, கோரிக்கை மனுக்களில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வேண்டிதான் அதிகமான மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அதில் நியாயமான கோரிக்கை மனுக்கள்மீது உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி வரப்பெற்ற மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மீனாட்சிபுரம் ஊராட்சி பாரமலையான்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டாக்கள் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மாங்குளம், காந்திநகர், மீனாட்சிபுரம் காலனி, பாரமலையான்பட்டி, சொக்கர்பட்டி, மீனாட்சிபுரம், ஆரப்பள்ளம், பொருசுப்பட்டி, தேத்தாம்பட்டி, பாரதிபுரம், ஜோதியாபட்டி, குருத்தூர், மாத்தூர் காலனி, செட்டிகுளம், மாத்தூர், புல்லுசேரி, டீச்சர் சிட்டி – மீனாட்சி கார்டன், பூண்டி, அழகாபுரி, வெள்ளியங்குன்றம், வெ.புதூர், அப்பன்திருப்பதி, மேல கள்ளந்திரி, அரிநாராயணபுரம் (குறிஞ்சி நகர்), துக்களப்பட்டி, லெட்சுமிபுரம், கைலாசபுரம், சின்ன மாங்குளம், கண்டமுத்துபட்டி, இந்திரா நகர், மறைக்காயர்புரம், பஞ்சந்தாங்கிபட்டி, நாயக்கன்பட்டி, மூனூர், பொய்கைகரைப்பட்டி, காட்டுவீடு, தொப்புலாம்பட்டி மற்றும் ஆமந்தூர் ஆகிய கிராமங்களில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் , பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!