மதுரை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட அரும்பனூர் கிராமத்தில் நேரடி நெல்நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் பி.மூர்த்தி.
மதுரை அருகே நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்:
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். மேலும், கருணை அடிப்படையில், விற்பனையாளர் பணிக்கான, பணி நியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து ,மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu