மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்: 2 லட்சம் பேருக்கு இலக்கு

மதுரை மாவட்டத்தில்  தடுப்பூசி முகாம்: 2 லட்சம் பேருக்கு இலக்கு
X

கடச்சநேந்தல் பகுதியில் உள்ள சிறப்பு முகாமில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டத்தில், தடுப்பூசி முகாம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று, 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் ,2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை, மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் உள்ள சிறப்பு முகாமில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மூன்றாவது அலை வருவதற்கு முன்னதாகவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது அலை வரும் பொழுது மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது போல சித்தரிக்கப்பட்டது. அதனை உடனடியாக பத்து நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பாதிப்புகள் குறைந்தது.

அதைப்போல, தற்போது 3-வது மூன்றாவது அலை வருவதாக கூறப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் பதினோரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி முகாம் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே, கிராமப்புறங்களில் தடுப்பூசி முகாம் குறித்து, பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், தடுப்பூசி போடும் மையங்கள் பலவும் கூட்டமின்றி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களை வீடு தேடி சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்