பராமரிப்பு பணி: வரும் 29 -இல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவிப்பு

பராமரிப்பு பணி: வரும் 29 -இல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி  அறிவிப்பு
X
அத்தியாவசியமான வார்டுகளுக்கு லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது

மதுரை மாநகராட்சியில் புதிய இரும்பு குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால் வரும் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுமென ஆணையர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி முதலாம் வைகை குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் முதலாம் வைகை குடிநீர் திட்டத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் பராமரிப்பு பணிகள், கீழமாரட் வீதி அருகில் உள்ள மேல்நிலைத் தொட்டி பழைய குழாய்களை எடுத்து விட்டு புதிய இரும்புக் குழாய்கள், புதிய வால்வுகளை பொருத்தி குழாய்களை இணைக்கும் பணிகள், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலைய வளாகம் மற்றும் கோச்சடை அரகில் பொருத்தும் பணிகள் நடைபெற இருப்பதால், எதிர்வரும் 29.7.2021 (வியாழக்;கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் பின்வரும் வார்டு பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும்..

ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி பகுதி 1, ஆரப்பாளையம், பிள்ளைமார் தெரு, கோமஸ்பாளையம், ஹார்வி நகர், ஏ.ஏ.ரோடு, டி.டி.ரோடு, கண்மாய்க்கரை, முனிசிபாளையம், புது ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம், மோதிலால் தெரு, கரிமேடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, பொன்னகரம் பகுதிகள்,

ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, மகபூப்பாளையம் மற்றும் அன்சாரி நகர் பகுதிகள்,

கீழமாரட் 1 ஆவது பகிர்மானம், தாசில்தார் பள்ளிவாசல் தெரு, ஆட்டுமந்தை பொட்டல், கீழமாரட் வீதி, கரீம்பள்ளிவாசல், சுங்கம் பள்ளிவாசல், காயிதேமில்லத் தெரு, இஸ்மாயில்புரம், அருணாசலப்புரம், கீழவெளிவீதி, லட்சுமிபுரம் கான்பாளையம் மற்றும் குறுக்குத் தெருக்கள்.

பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி, பழங்காநத்தம், வசந்த நகர் 4-ஆவது தெரு, திருவள்ளுவர் நகர், அக்ரஹாரம், தண்டைக்காரன்பேட்டை,

பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி 2-ஆவது பகிர்மானம், பசும்பொன்நகர், கீழத்தெரு, மருதுபாண்டியர் தெரு, பழங்காநத்தம், நேரு நகர், மாடக்குளம், வி.கே.பி.நகர், வடக்குத் தெரு, மற்றும் அரசரடி மேல்நிலைத்தொட்டி, துரைச்சாமி நகர், வேல்முருகன் நகர்

ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி 1 முதல் பகிர்மானம், தெற்கு மாசி வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி, காமாட்சி அம்மன் கோவில் தெரு, முத்தையாபிள்ளை தெரு, ஜடாமுனிகோவில் தெரு, மகால், சின்னக்கடைத்தெரு, பந்தடி தெரு, கான்சாமேட்டுத் தெரு, தெற்கு ஆவணி மூலத் வீதி, ஓதுவார் தெரு, வெங்கலகடைத்தெரு, சப்பாணி கோவில் தெரு, கான்சா மேட்டுத்தெரு பகுதிகள்,

ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி 2-ஆவது பகிர்மானம், தென்னை ஓலக்காரத்தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு மாரட் வீதி, தெற்கு வெளி வீதி, நாடார் வித்தியாசாலை, மீன்கடை, எப்.எப்.ரோடு, மகால் மற்றும் பந்தடி தெருக்கள், அரசரடி மேல்நிலைத்தொட்டி, சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 3 தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்கள்

ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி 2, சிந்தாமணி ரோடு, நாகுபிள்ளை தோப்பு பகுதிகள், வாழைத்தோப்பு பகுதிகள், கிருஷ்ணாபுரம் 1, 2 தெருக்கள், பச்சரிசிகாரத் தெருக்கள், பாலுச்சாமி ஐயர் தெரு, புதிய மகாளிப்பட்டி ரோடு மற்றும் குறுக்குத் தெருக்கள், இராமசத்திரம் குறுக்கு தெருக்கள்,

ஜோசப் பார்க் மேல்நிலைத் தொட்டி, 1 .மற்றும் சன்னியாசி ஊருணி மேல்நிலைத் தொட்டி பகுதிகள், காமராஜர்புரம் பகுதிகள், பாலரெங்காபுரம் மற்றும் சின்னக்கண்மாய் பகுதிகள், பங்கஜம் காலனி, புது இராம்நாட் ரோடு, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு, மீனாட்சி நகர் பகுதிகள், அனுப்பானடி பகுதிகள் முழுவதும், நரசிம்மாபுரம், நவரத்தினபுரம் பகுதிகள், சீனிவாசன் பெருமாள் கோவில் தெரு, ரசாயனப்பட்டறை, கீழ சந்தைப்பேட்டை.ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

எனவே, வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும், மேலும், அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்