முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை வழங்கக்கோரிமதுரை மாநாகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை வழங்கக்கோரிமதுரை மாநாகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்
X
மாநகராட்சி நிர்வாகம் பணம் வழங்கக் கோரி, ஒப்பந்ததாரர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்.


முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை வழங்கக்கோரி மதுரை மாநாகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சியின் அவரகால பணிகளை மதுரை மாநகாராட்சி பதிவு பெற்ற ஒப்பந்த்தார்கள் சங்கத்தின் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றி வரும் நிலையில் இது வரை பணியாற்றி வேலைகளுக்கு உள்ள நிலுவை தொகையான 36-கோடியை , முந்தைய ஆணையாளரிடம் போய் கேளுங்கள் என்று பதிய ஆணையர் கூறுவதாகவும், மாநகராட்சி வளாகத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் கட்டிய கட்டடத்தில் அலுவலக த்தையும் காலிசெய்ய வேண்டும் என்றும், இனி மேல் ஒப்பந்தம் இல்லாமல், எந்த பணியும் செய்யக்கூடாது என்று புதிய ஆணையர் கூறுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில், தலைவர் ராஜூ, செயலர் முருகானந்தம், பொருளாளர் சரவணன் உள்ளிட்ட ஒப்பந்தார்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!