திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது -முதல்வர் பழனிச்சாமி

திமுக  ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது -முதல்வர் பழனிச்சாமி
X

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என மதுரையில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தெரிவித்தார்.

மதுரை ஒத்தக்கடையில் மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து திரண்டிருந்த வாக்காளர்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கூறும் போது,நீர்நிலைகளை தூர்வாரி, வேளாண் பணி இந்தாண்டு சிறப்படைந்துள்ளது. விவசாயிகளிடம் எங்களுடைய மதிப்பு உயர்ந்து கொண்டு வருகின்றது. இதனை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம். தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் கட்சி திமுக. திமுக என்பது கம்பெனி. வாரிசு அரசியலை செய்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது. நாட்டையே பட்டா போட்டுவிடுவார்கள்.

அரசு அதிகாரிகளையும், டிஜிபியையும் உதயநிதி மிரட்டுகின்றார். காவல்துறையின் உச்சபட்ச அதிகாரியையே திமுகவினர் மிரட்டுகின்றனர் என்றால் நாட்டு மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்ற அவர் அதிமுக அரசு செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் கட்சியாக உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக கான்கீரிட் வீடு கட்டி தரப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Tags

Next Story
ai powered agriculture