மதுரையில் 5 பைசா பிரியாணி கடைக்கு சீல்

மதுரையில் 5 பைசா பிரியாணி கடைக்கு சீல்
X

மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை.

மதுரையில் 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கி, கூட்ட நெரிசலை ஏற்படுத்திய கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை செல்லூர் பகுதியில் புதியதாக திறந்த பிரியாணி கடை ஒன்று கடையை பிரபல படுத்தும் நோக்கோடு 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்வதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டது. இதனால், பிரியாணி வாங்குவதற்காக கடை முன் கடும் கூட்டம் கூடியது.

மேலும், உரிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்கப்பட்டது. இதனை அறிந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பிரியாணி கடைக்கு சீல் வைத்தனர். இதனால், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!