மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த 2.94 காேடி பறிமுதல்

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த 2.94 காேடி பறிமுதல்
X
மதுரையில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 2 கோடியே 94 லட்சம் ரூபாய் பறிமுதல்.

மதுரை கரிமேடு காவல் நிலைய பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் பையுடன் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தனர்.

அவர், மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரன் எனவும், நகைக்கடை உரிமையாளர் எனவும் தெரிவித்தார். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவர்களை கரிமேடு காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

அதில், நகை தொழில் வியாபாரம் செய்து வருவதாகவும், அதற்காக பணம் எடுத்துச் செல்வதாக முன்னுக்கு பின்னாக தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்களது பையிலிருந்து 2 கோடியே 94 லட்சம் ரூபாய் இருந்தது.

இதுகுறித்து, இன்று மதுரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் விக்னேஸ்வரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!