மதுரை ஜப்பானில் இருக்கிறதா? ஸ்டாலின் கேள்வி

மதுரை ஜப்பானில் இருக்கிறதா? ஸ்டாலின் கேள்வி
X

மதுரை என்பது இந்தியாவில் இருக்கிறதா? அல்லது ஜப்பானில் இருக்கிறதா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மதுரை யானைமலை, ஒத்தக்கடை பகுதியில் நேற்று நடைபெற்ற,உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு செய்தது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2018ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார் பிரதமர். அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.

தமிழ்நாட்டில் பாஜகவோ அதன் கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை. பிறகு எதற்காக திட்டங்களுக்கு பணம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறாரா? ஜப்பான் நாட்டில் இருந்து நிதி வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால் ஜப்பானில் இருந்து நிதி வரும் வரை இந்த திட்டம் கிடப்பில் போடப்படுமா? என்று நம்முடைய டி.ஆர்.பாலு திருப்பிக் கேட்டுள்ளார்.

இதில் நான் கேட்கும் கேள்வி, மதுரை என்பது இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? ஜப்பான் நாடு நிதி தர மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராதா?.ஒரே ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு அந்த திட்டத்தையும் ஏழு ஆண்டுகளாக பாஜக பம்மாத்து காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா