கடன் பிரச்னை, கணவரை தாக்கிய மனைவி உள்பட மூவர் கைது:

கடன் பிரச்னை, கணவரை தாக்கிய மனைவி உள்பட மூவர் கைது:
X
மதுரை மாவட்ட க்ரைம் செய்திகளின் தொகுப்பு

திருநகரில் கடன் பிரச்சனையில் கணவர் மீது தாக்குதல் நடத்திய மனைவி உள்பட மூவர் கைது

விளாச்சேரி ஈஸ்வரன் நகர் ஆதீஸ்வரன் மகன் வேல்முருகன் 28. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆனந்த் 38. ஆனந்தின் மனைவியும் வேல்முருகனும் ஒரே நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.

இந்த கடன் சம்பந்தமாக அவர்கள் அடிக்கடி போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆனந்த் அதே மகுதியைச் சேர்ந்த ஆணையன் மகன் செல்வராஜ் 25 வேல்முருகனின் மனைவி அபிநயா25 ஆகிய மூவரும் ஆபாசமாக பேசி வேல்முருகனை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து, வேல்முருகன் திருநகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ,கணவர் வேல்முருகனை தாக்கிய மனைவி அபிநயா மற்றும் ஆனந்த் செல்வராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

கடன் வசூலுக்கு வர மறுப்பு சுய உதவி குழு ஊழியர் மீது தாக்குதல்

மதுரை , கோச்சடை கலைஅம்பலம் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஜெயபிரபா23. திருப்புவனம் கீழராங்கியம் ஒத்த வீடுவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் தந்தீஸ் பிரபு 23 .இவர்கள் இருவரும் மகளிர் சுய உதவி குழு கடன்வசூல் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

சம்பவத்தன்று வசந்தநகரில் வசூலுக்கு வரும்படி தந்தீஸ்பிரபு அழைத்துள்ளார். இதற்கு ஜெயபிரபா மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த தந்தீஸ் பிரபு ,ஜெயா பிரபாவை ஆபாசமாக பேசி தாக்கினார் .இந்த சம்பவம் குறித்து ஜெயபிரபா சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் தந்தீஸ்பிரபுவை கைது செய்தனர்.


இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கடத்திச்சென்று பணம் பறிப்பு:

கரிமேடு மோதிலால் மெயின் ரோடு தெற்கு மடத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மண்ணெண்ணை கண்ணன் 44. இவர் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவுகொடுத்துள்ளார் .தொடர்ந்து இவ்வாறு செய்து அவரிடம் பணம்கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கண்ணன் என்ற மன்னனை கண்ணன் அவருடைய மனைவி பிரேமா உறவினர்கள் செல்வி, பாலா, காதர் ,அருள்,மணி சங்கையாகிய ஏழு பேரும் அந்த பெண்ணை கடத்திச் சென்று அவரிடம் இருந்து ரூபாய் ஆறாயிரத்து ஐநூறை பறித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கடத்தி பணம் பறித்த ஏழு பேரையும் கைது செய்தனர்.


வேலையில்லாத விரக்தி: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை:

மதுரை, விராட்டிபத்து கிருதுமால் நகர் சுப்ரமணியன் மகன் ராஜா 21. இவருக்கு நிரந்தர வேலை இல்லை. அவரை வேலைக்கு செல்லும்படி அவருடைய தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமடைந்த ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை மலனின்றி வாலிபர் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தந்தை சுப்பிரமணியன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து சாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்த கைதி தப்பி ஓட்டம்:

மதுரை மாவட்ட நீதிமன்றம் இரண்டாவது அடிஷனல் என் டி பி எஸ் நீதிமன்றத்தில் மணி மகன் சரவணகுமார் என்ற வாழைப்பழ சரவணன் என்பவர் ஆஜரானார்.

அவர் மீதுள்ள முந்தைய வழக்கிற்காக ஆஜரானார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் .இந்த நிலையில் திடீரென்று அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் . இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியர் அமராவதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி கைதி சரவண குமாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!