மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் குதித்து இளைஞர் தற்கொலை
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தற்கொலை செய்து கொண்டவரை தேடும்பணி நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான மாரியம்மன் தெப்பக்குளம் உள்ளது. தற்போது வைக்க ஆற்றிலிருந்து நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால், தெப்பக்குளம் முழுவதும் நீர் முழுகொள்ளளவை எட்டியுள்ளது . இன்று காலை, சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் குதித்து உள்ளதாக, மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கும் தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத்
தொடர்ந்து, அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 4 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
உடலை, கைப்பற்றிய தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? தற்கொலைக்கான காரணம் என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர், மதுரை ஐராவதநல்லூர் சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்தது.
இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென ஒருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu