மதுரையில் மேம்பாலத்தில் ஏறி இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

மதுரையில் மேம்பாலத்தில் ஏறி   இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
X

மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே மேம்பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

தனது குழந்தையை பார்க்க மாமியார் வீட்டில் அனுமதிக்காத காரணத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் ஏறி நின்ற ஒரு இளைஞர் அதிலிருந்து கீழே குதிக்கப் போவதாக சப்தம் போட்டுள்ளார். இதைப்பார்த்த, வாகன ஓட்டிகள் வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு அவரைக் கீழே இறங்கச் சொன்னார்கள். எனினும், அந்த இளைஞர் கீழே இறங்க மறுத்ததால், மேலே ஒருவர் ஏறிச்சென்று எந்த பிரச்னை இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி கீழே இறங்கி வர வேண்டும் என்றார். ஆனால் அதற்கும் அந்த இளைஞர் பணியாததால், மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவரிடம் சாதுர்யமாகப் பேசி கீழே இறக்கினர். பின், அவரை விசாரித்தபோது, மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த லெனின் குமார்( 20 ) என்பதும், இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ருதி என்பவருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமண நடந்தும், மூன்று நாட்களுக்கு முன் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

தனது குழந்தையை பார்க்க வைத்தியநாதபுரத்திலுள்ள மாமியார் வீட்டுக்குச்சென்ற போது, அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லையாம். இதன் காரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த லெனின்குமார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனமும் மற்றும் பொதுமக்கள் அதிக அளவு செல்லக்கூடிய பகுதியில், ஒருவர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!