திருப்பரங்குன்றத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது: கிரைம் செய்திகள்..

திருப்பரங்குன்றத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது: கிரைம் செய்திகள்..
X
திருப்பரங்குன்றத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை, திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதன் 48. இவர் திருப்பரங்குன்றம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் வியாபாரம் முடித்து இவர் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் வழமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500 ஐ வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து, வரதன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவரிடம் வழிபறியில் ஈடுபட்ட திருப்பரங்குன்றம் பாம்பன் நகரை சேர்ந்த பாலு மகன் கார்த்தி 22 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை, முடக்கு சாலை இந்திராணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் 37. இவருக்கு 2011ல் திருமணம் நடந்தது. இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே கருத்துசண்டை நடந்தது.சம்பவத்தன்றும்இவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.இதனால், மீண்டும் இருவருக்கும் இடையே

வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனைவி கணவருடன் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு நாகமலை புதுக்கோட்டைக்கு சென்று விட்டார். இதனால், மணமுடைந்த வெங்கடேஷ் வீட்டில்மேற் கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, மனைவி மீனா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப்

பதிவு செய்து கூலி தொழிலாளி வெங்கடேசனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரிமேட்டில் 2 கிலோ கஞ்சாவுடன் 2பேர் கைது பைக் பறிமுதல்

கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேலு. இவர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் போலீசாருடன் புட்டு தோப்பு கருடர் பாலம் இபி ஆபிஸ் அருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக பைக்குடன் நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தார். அவர்கள் பைக்கில் இரண்டு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது .இதைத் தொடர்ந்து அவர்கள் கரிமேடு அழகரடி இரண்டாவது தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற ராகு காலம் ரவி 53,அழகரடி முதல் தெருவை சேர்ந்த வெங்கடேசன் 29 என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து இரண்டு கிலோ கஞ்சாவையும் அதை பதுக்கி வைத்திரருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண்கள் இருவர் உயிரிழப்பு

மதுரை அருகே வாடிப்பட்டி தாலுகா ஆதனூர் தோப்பூரை சேர்ந்தவர் சேதுபதி மனைவி இருந்தா 43 .இவர் தோட்டத்தில் தேங்காய் வெட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது தென்னை மரத்தில் இருந்து ஒரு கொத்து தேங்காய் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் விழுந்தது. இதை எடுப்பதற்காக பிருந்தா கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது, கால் தவறி கிணத்துக்குள் விழுந்தார். இதில், கிணற்றுத் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார் .இது குறித்து, அவருடைய மகள் மும்தா பிரியதர்ஷினி 22 அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருடைய சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்டின் பட்டியில் மூதாட்டி உயிரிழப்பு

நிலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 62. இவர் ஆடு வளர்த்து வருகிறார்.அந்த ஆடுகளை நிலையூரில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். சாப்பிடுவதற்காக உணவு கொண்டு சென்றிருந்தார். அந்த உணவை சாப்பிட தோட்டத்தில் இருந்த கிணறு அருகே சென்றார் அப்போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார் .அதில் அங்கிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து அவருடைய கணவர் அய்யனார் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!