காளைகளுக்கு உடற்தகுதி சான்று வழங்கும் பணி தொடக்கம்

காளைகளுக்கு உடற்தகுதி சான்று வழங்கும் பணி தொடக்கம்
X

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு பழங்காநத்தம் பகுதியில் உடற் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

இன்று நடைபெற்ற உடற்பரிசோதனை சான்று வழங்கும் முகாமில் 40 காளைகளுக்கு உடற்தகுதி சான்று வழங்கப்பட்டது

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு பழங்காநத்தம் பகுதியில் உடற் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வருகிற 14-ஆம் தேதி அவனியாபுரத்தில் அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பாலமேட்டில் 16ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள கலைகளுக்கான உடற் தகுதி சான்று வழங்கும் பணி இன்று மதுரை பழங்காநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது . மருத்துவர்களின் பரிந்துரை ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு, நாட்டுக்காளைகளாக இருத்தல் வேண்டும். காலையில் மூன்றை வயதிற்கு மேற்பட்ட தாகவும் குறைந்தபட்சம் 116 சென்டிமீட்டர் உயரம் இருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில் கலைகளுக்கான பரிசோதனை முடிவடைந்த பின்னர் காளை மற்றும் காளை உரிமையாளரின் புகைப்படம், உரிமையாளர் ஆதார் எண் அவற்றை சமர்ப்பித்து பின்னர காளைகளுக்கான உறுதிச் சான்று ரசீது வழங்கப்பட்டது.

இதனையடுத்து காளைகளுக்கான உடற் தகுதி சான்றிதழ் அடிப்படையில் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும்.இன்று நடைபெற்ற உடற்பரிசோதனை சான்று வழங்கும் முகாமில் 40 காளைகளுக்கு உடற்தகுதி சான்று வழங்கப்பட்டது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!