மதுரை மாட்டுத்தாவணி அருகே பிரபல ஜவுளி கடையில் திருடிய பெண் கைது
பைல் படம்
ஜவுளிக்கடையில் சேலைகள் திருடிய பெண் கைது
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே பிரபல் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. அதன் முதல் தளத்தில் வியாபாரம் நடந்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவர் நகரும் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அவரை ஏதோ ஒன்றை மறைத்து செல்வது தெரிய வந்தது .இதைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த பெண்கள் அவரை தனியாக அழைத்து சோதனை செய்தனர்.
அப்போது அந்தப் பெண் அவர் உடுத்தியிருந்த சேலைக்குள் 5 சேலைகளையும் ஒரு டாப்சையும் திருடி வைத்திருந்தார் .அவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிடிபட்ட பெண்மீது அந்த நிறுவணத்தில் வேலை செய்துவரும் மயில் என்பவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார்செய்து அவரை ஒப்படைத்தார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் திருப்பூர் பல்லடம் ரோட்டைச் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்த சீனி அம்மாள் 58 என்று தெரியவந்தது .அவரை போலீசார் கைது செய்தனர்.
வைகை தென்கரையில் கத்தியுடன்திரிந்த ரவுடி கைது
மதுரை, திலகர்திடல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமசிவன். இவர் வைகை தெற்கு கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் டி.வி.எஸ். தோப்பு அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் ஓட தொடங்கினார். அவரை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார். அவருடன் கத்தி ஒன்று இருந்தது.அதை பறிமுதல் செய்தார். அந்த வாலிபர் ரவுடி சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை சீனிவாசன் மகன் விஜய் 27 என்று தெரிய வந்தது.அவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக என்ன திட்டத்தில் அங்கு பதுங்கி இருந்தார் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழங்காநத்தத்தில் ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி: மூன்று வாலிபர்கள் கைது
மதுரை பழங்காநத்தம் மேல வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கவி பாரதி 27. இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு காபி கடை முன்பாக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அவரை தனியாக அழைத்துச் சென்று இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் 250- ஐ வழிப்பறி செய்துவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து , கவி பாரதி எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தேனி மெயின் ரோடு மீனாட்சிபுரம் அபிஷேக் என்ற நவநீதகிருஷ்ணன் 21 ,சம்மட்டிபுரம் பாண்டி கோயில் இரண்டாவது தெரு மாரிமுத்து மகன் சிவன்திருப்பதி 19, முடக்கு சாலை ஜெயச்சந்திரன் மகன் பிரவீன் குமார் 20 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்..
ஜெய்ஹிந்த்புரத்தில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறிப்பு: மூன்று பேர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார்ரோடு பாண்டியராஜன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் களியவானன் 53.இவர் தொழிலதிபராவார் .அந்தப்பகுதியில் ,மரப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேதாஜி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது, மூன்று வாலிபர்கள் அவரை வழிமறித்தனர் .அவர்கள் அவர் கழுத்தில் கத்தியை வைத்து மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் ,அந்த வாலிபர்கள் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 600 ஐ பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து களியவாணன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவரிடம் பணம் பறித்த வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு நவநீதன் மகன் சதீஸ் என்ற சூம்பி சதீஷ் 22,நேதாஜி நகர் மீனாட்சி நகர் பாண்டி மகன் பாலமுருகன் என்ற ஒரு ரூபாய் பாலா 24, அண்ணா மெயின்வீதி ஜீவராஜ் மகன் பிரபு 19 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரத்தில் பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது
மதுரை , அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மனைவி மீனா 30. அதே பகுதியைச் சேர்ந்தவர் சமயமுத்து மகன் ஜெயக்குமார் 31. இவர்கள் வீட்டில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்தவழியாகச் சென்று கொண்டிருந்த மீனாவை ஜெயக்குமார் ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மீனா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu