மதுரையில் மின்சார கம்பிகள் செல்லும் வழியில் உள்ள மரக்கிளைகள் வெட்டப்படுமா

மதுரையில் மின்சார கம்பிகள் செல்லும் வழியில் உள்ள மரக்கிளைகள் வெட்டப்படுமா
X
மின்சார கம்பிகள் மரக்கிளைகளில் சிக்கி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மின்வாரியம் மரங்களை வெட்டாதால் மழைக்காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை அண்ணா நகர் , கோமதிபுரம் பகுதிகளில், சாலை ஓர மரக்கிளைகளால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறதாம். கோமதிபுரம், ஜூபிலி டவுன் பகுதிகளில் மரங்கள் வழியாக மின்சார கம்பிகள் செல்வதால் மழைக்காலங்களில் அடிக்கடி இப்பதிகளில் மின்தடை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மதுரை மேலமடை மின்சார வாரிய அலுவலர்கள், ஜூபிலிடவுன் பகுதியை பார்வையிட்டு, மின்சார கம்பிகள் செல்லும் பகுதிகளில் வயர் மேன், லைன் மேன்களை வைத்து, மரக்கிளைகள் அகற்ற வேண்டும் என இப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்கள் பலமுறை வயர் மேன் மற்றும் லைன்மேன்களில் மரக் கிளைகளை அகற்றுவதற்கு எடுத்துரைத்தும், இதுவரை கோமதிபுரம் பகுதிகளில் மின்சார கம்பிகள் செல்லும் மரக் கிளைகளை அகற்றுவதற்கு ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, மின்வாரிய கோட்ட பொறியாளர் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில், உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரக்கிளைகளை அகற்றப்படாவிட்டால், மழைக்காலங்களில் காற்று வரும்போது மின்சார கம்பிகள் மரக்கிளைகளில் சிக்கி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, இப் பிரச்னையை தீர்க்க மதுரை மேலமடை மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்