மதுரையில் பெருகி வரும் கழிவு நீர் கடல்: கண்டு கொள்ளாத மாநகராட்சி

மதுரையில் பெருகி வரும் கழிவு நீர் கடல்: கண்டு கொள்ளாத மாநகராட்சி
X

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர்

மதுரையில் அமைச்சர் தொகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை விரைந்து அகற்ற மாநகராட்சி முன் வருமா?

அமைச்சர்.பி. டி .ஆர். பழனிவேல் தியாகராஜனின் தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள், மறியலுக்கு தயாராகி வருகின்றனராம்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 21 மற்றும் 22 சிங்கம்புடாரி கோவில் முதலாவது மற்றும் இரண்டாவது தெருவில் பாதாள சாக்கடை நீர் முற்றிலுமாக வெளியேறி சுகாதார கேட்டின் உச்சமாக உள்ளது.

சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைத்த போது முறையான வடிகால் வசதி இல்லாமல் கழிவுநீர் அப்படியே தேங்கி நிற்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதனால், இந்தப் பகுதியில் பெரியவர்கள் கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொசு தொல்லையால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மதுரை மாநகராட்சி ஆணையருக்கும், மண்டல நிர்வாகிக்கும் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தம் தற்காலிகமாக சரி செய்வதே அவர்களின் பணியாக உள்ளது.


மழைக்காலங்களில் அதிகப்படியான கழிவுநீர் தேங்குவதால் கழிவுநீர் குடியிருப்பிற்குள் வரும் சூழ்நிலை இந்த பகுதி மக்களுக்கு உருவாகியுள்ளது. மேலும், மாநகராட்சிக்கு இது சம்பந்தமாக புகார் அனுப்பிய போது அந்த பகுதி சரி செய்யப்பட்டு விட்டது என்று தவறுதலாக செய்திகள் அனுப்பப்படுவதாக இந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையை கையில் வைத்துக் கொண்டு மிஸ்டர் கிளீன் அமைச்சர் என்று பெயர் பெற்று வரும் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வான பி .டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது தொகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்து இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி சுகாதாரக் கேடு ஏற்படா வண்ணம் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் ,விரைவில் கழிவு நீர் கால்வாயை சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்யப் போவதாகவும் இந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!