மதுரை மாநகராட்சியின் மேயர் யார்? என்ற குழப்பத்தில் திமுகவினர்
ரோகிணிபொம்மை தேவன்
மதுரை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 65 வார்டுகளில் திமுக தனித்து வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுகவின் முக்கிய புள்ளிகளின் உறவினர்களும் அடங்குவர். இதனால் மதுரை மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு கிடைக்கும்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மட்டுமின்றி மதுரையில் உள்ள திமுகவினருக்கிடையே இந்த கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நமக்கு சாதகமாக இருக்கும் நபர் மேயராக வந்தால்தான் நாம் எதையும் சாதிக்க முடியும் என்றும், நமது கட்சிக்காரராகவே இருந்தாலும் நமக்கு சாதகமாக இல்லாத நபர் வந்தால் நாம் ஒன்றும் சாதிக்க முடியாது என்றும் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
காரணம் என்னவென்றால் மதுரை 17 வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ரோகிணிபொம்மை தேவன் என்பவர் தமிழரசி தங்கப்பாண்டியன் உறவினர் ஆவார். இதேபோல் 5வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வாசுகி அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு பெற்றவர். 32வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் விஜய மௌசுமி என்பவர் பொன். முத்துராமலிங்கம் மருமகள் ஆவார். எனவே இவர்கள் அனைவரும் கட்சியின் மேலிடத்தில் பெரும் செல்வாக்குடன் இருப்பவர்கள். இதனால் இவர்கள் 3 பேரில் யார்? மேயராக பதவி ஏற்பார் என்பதுதான் கட்சியினரின் எதிர்பார்ப்பாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu