அதிமுகவில் நடப்பது மோதல் அல்ல உரிமை பிரச்சனை - செல்லூர் ராஜூ

அதிமுகவில் நடப்பது மோதல் அல்ல உரிமை பிரச்சனை - செல்லூர் ராஜூ
X

செல்லூர் ராஜூ.

அதிமுகவில் நடப்பது மோதல் அல்ல உரிமை பிரச்சனைதான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவில், நடப்பது மோதல் அல்ல உரிமை பிரச்சனைதான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில், அவர் செய்தியாளர்களிடம் பேசியது:- அதிமுக என்றுமே மக்களுக்காக பாடுபட்ட கட்சி என்றும், அதிமுகவில் பிளவு ஏதும் ஏற்படவில்லை என்றும், உரிமைக்காக போராடி வருகிறார்கள் என்றும், அதிமுகவை அளிக்க முடியாது என்றும், தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. வேண்டுமென்றே சில ஊடகங்கள் அதிமுகவுக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை பரப்புவதாக அவர் தெரிவித்தார்.

அதிமுகவில் விரைவில் சுமுக நிலை ஏற்படும் என்றும், திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அவர்களே அழிந்து போவார்கள் என, அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது, முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை முன்னாள் துணை மேயர் திரவியம் அதிமுக நிர்வாகிகள் ராஜா எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business